பாம்பு சட்டை உரித்து பார்த்திருக்கிறீர்களா..... முழு முட்டையையும் அப்படியே விழுங்கும் பாம்பின் அரிய காட்சி!
பாம்பு தோல் உரிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பாம்புகளுக்கு தோல் உரிக்கும் நேரம் வரும் போது பழைய தோலுக்குக்கீழேயே புதுத்தோல் வளர்ந்திருக்கும். இந்த நிலையில் தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும்.
பின் தன் மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்துத் தேய்க்கும் போது அது கிழியும்.
Somebody changed the clothes. This 7.5 feet lives in our house. We don’t disturb him. In return he follows the social distance norms. pic.twitter.com/DANKe4xRiX
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 28, 2021
பின் பாம்பு அதன் பழைய தோலை விடுத்து லாவகமாக வெளியேறும். பாம்பின் உரித்த சட்டை பாம்பின் வடிவத்திலேயே முழுவதுமாக இருந்தால் அது ஆரோக்கியமாக பாம்பு என்பது பொருள்.
மேலும் தோலில் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளை அகற்றவும், பாம்பு சட்டையை உரிக்கும். இந்த நிலையில் வனத்துறை அதிகாரி ஒருவர் பாம்பு தோல் உரிக்கும் புகைப்படத்தினை வெளியிட அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, பாம்பு ஒன்று முழு முட்டையை விழுங்கும் காட்சி ஒன்றும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.