சைக்கிளில் சென்ற பாம்பு.... தலைதெறிக்க ஓடிய நபரின் காமெடி காட்சி
நபர் ஒருவர் பாம்பு ஒன்றினை தனது சைக்கிளில் வைத்து கூட்டிச் செல்லும் காணொளி வைரலாகி வருகின்றது.
சைக்கிள் சவாரி செய்யும் பாம்பு
பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று கூறப்படும் நிலையில், இங்கு நபரின் சைக்கிளில் அசால்டாக சவாரி செய்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
இன்றைய காலத்தில் உண்மையான காட்சி எது? AI தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சி எது? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு காணொளிகள் வெளியாகுகின்றது.
நபர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரது பின்புற கெரியரில் பாம்பு ஒன்று வளைந்து செல்கின்றது.
வளைந்து செல்லும் பாம்பு அருகில் நின்ற இருசக்கர வாகன ஓட்டியையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. பின்பு குறித்த பாம்பு இறங்கிய வேகத்தில் சரசரவென செடிக்குள் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
பலரும் இக்காட்சியின் உண்மைத் தன்மை தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |