Viral Video: பைக் சைலன்சரில் அசால்டாக பயணிக்கும் பாம்பு... நம்பமுடியாத காணொளி
பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தின் சைலன்சர் ஓட்டையின் வழியாக உள்ளே செல்லும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாம்பின் பயமுறுத்தும் பயணம்
பொதுவாக பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே... ஏனெனில் பாம்பு விஷத்தன்மை கொண்டதால் எளிதில் மனிதர்களை கடித்து மரணத்தையும் ஏற்படுத்திவிடும்.
இன்றைய காலத்தில் சிலர் விஷப்பாம்புகளைக் கையில் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாலும், சிலர் அதன் மீது அசால்டாக படுக்கவும் செய்கின்றனர்.

மேலும் சில காட்சிகளில் மனிதர்கள் அணியும் காலணிகள், இருசக்கர வாகனத்திலும் பதுங்கி இருக்கின்றது. ஆனால் இங்கு பார்வையாளர்கள் சற்று அதிர்ச்சியடையும் வகையில் காணொளி காணப்படுகின்றது.
அதாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தின் சைலன்சர் ஓட்டை வழியாக பாம்பு ஒன்று உள்ளே செல்கின்றது.
குறித்த வாகனத்தின் உரிமையாளர் பைக்கின் சத்தம் வித்தியாசமாக கேட்பதை உணர்ந்து சோதனை செய்துள்ளார். அப்பொழுதே விஷத்தன்மை கொண்ட பாம்பு உள்ளே பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |