வாயில் மீனை கௌவி நீந்திச்சென்ற பாம்பு - காமெடியாக வைரலாகும் காணொளி
ச5க வலைத்தளங்களில் மீன் ஒன்றை பாம்பு வாயில் கௌவிக்கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
கொல்கத்தாவில் வெள்ளம் வந்ததை அடுத்து ஒரு வினோதமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளத்தில் நீந்திச் சென்ற பாம்பு ஒன்று, அதன் வாயில் ஒரு மீனை இறுக்கமாக கவ்விக் கொண்டு செல்கிறது.
இதற்கு இணையவாசிகள் காமெடியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் இடம்பெற்றுள்ள பாம்பு, செக்கர்டு கீல்பேக் (Checkered Keelback) எனப்படும் விஷமற்ற நீர்ப் பாம்பாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே நன்னீர் வாழ்விடங்களில் காணப்படும் இந்த பாம்பு, மீன்களை வேட்டையாடும் தன்மை கொண்டது.
இந்த காரணத்தினால் தான் மீனை இந்த பாம்பு வேட்டையாடி உள்ளது. ஆனால் பாம்பு மீன் சாப்பிடுவது இதுவே முதல் காட்சி என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |