கனவில் பாம்பு வருவதை தடுக்க பரிகாரம்! இறுதியில் பாம்பு தீண்டி நாக்கை இழந்த சோகம்: நடந்தது என்ன?
கனவில் பாம்பு வருவதைத் தடுக்க பரிகாரம் செய்ய சென்ற நபர் இறுதியில், பாம்பு தீண்டி நாக்கையே இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனவில் வந்த பாம்பு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கனவில் அடிக்கடி பாம்பு வந்து தொல்லை கொடுப்பதால், அதற்காக பரிகாரத்தினை கேட்க ஜோதிடரிடம் சென்றுள்ள நிலையில், பரிகாரம் கூறியுள்ளார்.
குறித்த பரிகாரத்தை செய்தால் இனிமேல் கனவில் பாம்பு வராது என்று கூறியதை நம்பி குறித்த பரிகாரத்தை செய்ய சம்மதித்துள்ளார்.
பின்பு பரிகாரம் செய்ய கோவிலுக்கு வந்த விவசாயிடம், ஜோதிடர் தன்னிடம் இருக்கும் கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, இந்த பாம்பின் முன் நாக்கை நீட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
விவசாயி குறித்த ஜோதிடரின் சொல்லைக் கேட்டு பாம்பின் முன்பு தனது நாக்கை நீட்டியுள்ளார். பின்பு உடனே விஷம் ஏறி மயக்கமடைந்துள்ளார்.
அங்கிருந்த நபர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாம்பு தீண்டிய நாக்கை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனே உயிரைக் காக்க நாக்கை துண்டித்துள்ளார் விவசாயி... இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.