பாம்பின் உடலில் சிக்கிய தங்க மோதிரம் - தூங்கிட்டு வாங்கடா அந்த தங்கத்த!
ஒருவரின் வீட்டிற்குள் சென்ற பாம்பில் தங்க மோதிரம் ஒன்று சிக்கி உள்ளது.

பாம்பின் உடலில் தங்க மோதிரம்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு வீட்டில் நடந்த அதிசயமான சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள வீடொன்றில் புகுந்த சாரைப்பாம்பு மேசையிலிருந்த மோதிரத்தினுள் நுழைந்து அதனை மாட்டிச் சென்று அவதிப்பட்டுள்ளது.

வனத்துறைக்கு அறிவித்தபின் மோதிரம் பத்திரமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேசையில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் சேராவின் உடலில் குத்தி மாட்டிக்கொண்டது. மேசை இழுப்பறையைத் திறந்த குழந்தைகள்தான் முதலில் அந்தப் பாம்பைக் கண்டனர்.
அது என்ன வகையான பாம்பு என்று தெரியாமல் வனத்துறைக்கு அறியப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த விடயம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலரும் தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்த என்றும் இது திருட்டு பாம்பு போல என்று இன்னும் பலர் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |