பாம்பு சிரித்து பார்த்ததுண்டா? மிக அரிய திகில் காட்சி இதோ
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
சமீப காலங்களில் பல வித பாம்புகளின் (Snake) வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது. நிஜ வாழ்க்கையில் நாம் கண்ணால் காண முடியாத பல விஷயங்களை இங்கே மிக எளிதாக கண்டு விடலாம்.
இப்படி நாம் காணும் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில் பாம்பிற்குதான் முக்கிய கதாபாத்திரம். இந்த வீடியோவில் நாம் காணும் பாம்பு நம்மை அதிசயிக்க வைப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கின்றது.
இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
சில வினாடிகளே உள்ள இந்த வீடியோ மிக வேகமாக வைரல் (Viral Video) ஆகி வருகின்றது. இதில் ஒரு சிறிய பாம்பு ஒரு அலமாரியில் உள்ளது. பொதுவாக பாம்புகளின் முகம் மிகவும் பயம் உண்டாக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த வீடியோவில் அப்படி எதையும் காண முடியவில்லை.