பாம்பு தோல் உரிப்பதை பார்த்ததுண்டா? தத்ரூப காணொளி இதோ
பாம்பு ஒன்று தோல் உரிக்கும் காணொளி இன்ஸ்டாகிராமில் பயங்கர வைரலாகி வருகின்றது.
பதற வைக்கும் பாம்பு
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பீதி தொற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு மனிதர்களை பயமுறுத்தி வைத்திருக்கும் பாம்பு, நம்மை கடித்தால் மரணத்தினை சந்திக்கும் நிலைகூட ஏற்படும்.
இந்த காரணத்தினாலே பலரும் பாம்பைக் கண்டால் பயந்து தலைதெறிக்க ஓடிவிடுகின்றனர். அதே போன்று பாம்பு மட்டுமின்றி அது உரித்துப்போடும் தோலைக் கண்டாலும் பயம் ஏற்படும்.
ஏனெனில் அதனை அவதானித்தால், பாம்பு இங்கு தான் இருக்கின்றது என்றும் நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிப்புடன் காணப்படுவோம்.
இங்கு பாம்பு தனது தோலை உரிக்கும் காட்சியினையே காணப்போகிறோம். பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும்.
பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது. பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.
இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.