ஒரே நேரத்தில் 100 பேரைக் கொல்லும் கொடிய விஷப்பாம்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலகில் கொடிய பாம்பு என அடையாளம் காணப்பட்டுள்ள பாம்பு ஒரே நேரத்தில் 100 பேரைக் கொல்லும் விஷம் கொண்டதாம்.
பொதுவாகவே பாம்பு என்றாலே எல்லோருக்கும் பயம் தான். அதிலும் விஷப் பாம்புகள் என்றால் இன்னும் அதீத பயம். இவ்வாறு இருக்கையில் ஒரு பாம்பு ஒரே கடியில் 100 பேரைக் கொள்ளும் என்றால் நம்பமுடிகிறதா?
முதலிடம்

தாய்வான் நாட்டில் உள்ள இந்த கொடிய வகை விஷப்பாம்பு ஒரே நேரத்தில் 100 பேரை உயிர் இழக்க வைக்கும் அளவிற்கு கொடிய விசத்தன்மை கொண்டது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூல் ஒப் கெமிஸ்ட்ரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 10 கொடிய பாம்புகளின் பட்டியலில் இந்த பாம்பு முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்தப்பாம்பு ஒருமுறை கடித்தால் 110 மில்லி கிராம் விஷம் வெளிப்படும் என்றும் இந்த விஷம் 100 மனிதர்களை அல்லது 250000 எலிகளைக் கொல்ல போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆபத்து
இந்த பாம்பு கடித்தால் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும் என்றும் இந்த பாம்பு கடித்த ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் கூச்ச சுபாவம் என்று கூறப்படும் இந்த பாம்பை சீண்டினால் மட்டுமே கடிக்கும் என்றும் உலகிலேயே மிக கொடுமையான விஷத்தைக் கொண்ட இந்த பாம்பு தைவான் மற்றும் ஆஸ்திரேலிய காடுகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பாம்பின் நிறம் ஒவ்வொரு பருவத்திற்கும் மாறுபடும் என்றும் குளிர்காலத்தில் கருப்பாகவும் கோடைகாலத்தில் மங்கலாகவும் இருக்குமென்றும் பெரிய கண்களை கொண்ட பாம்பு இது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.