பனை மரத்தில் சரசரவென ஏறும் ராட்சத நாகப்பாம்பு - அலறவிட்ட வைரல் வீடியோ!
இன்றைய நவீன உலகில் இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோ காட்சிகள் பல வகைகள்வைரலாகி வருகின்றன. அவைகள் சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன. பல சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில், பாம்பு வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பிரமிக்க வைத்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியில் பாம்பு ஒன்று மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பனைமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும்.
ஆனால், இதில் சாதாரணமாக பாம்பு மரத்தில் ஏறி செல்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி, அவர், @susantananda3 என்ற தனது டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
The pole dancer 💃
— Susanta Nanda IFS (@susantananda3) January 4, 2022
Snakes typically climb trees by a hold-and-release movement called “concertina locomotion.” It grips two spots on a tree with S-shaped bends in its body and by coiling around a trunk multiple times. pic.twitter.com/aJ7jFRtLHG