பல வண்ணங்களில் தோன்றும் அபூர்வ பாம்பு- இணையத்தில் வைரலாகும் அரிய காட்சி!
பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான். அதற்கு காரணம் பாம்பின் விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம்.
ஆனால் அதே பாம்பை சிலர் தங்கள் வீடுகளில் வளர்ந்துவரும் சம்பவமும் இந்த உலகில் நடப்பதுதான்.
இந்நிலையில், நபர் ஒருவர் வளர்த்துவரும் பாம்பு ஒன்று பல வண்ணங்களில் மிளிரும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. j
ayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியில், பெரிய மலைப்பாம்பு ஒன்று பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பாம்பு வானவில் போன்ற தோற்றத்துடன் பார்க்கவே பல வண்ணங்களில் மிகவும் அழகாக உள்ளது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.