மருத்துவமனையில் வாவா சுரேஷ் எப்படி இருக்கிறார்? வெளியான புகைப்படம்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷின் மருத்துவமனை புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தினை பிடிக்க சென்ற வாவா சுரேஷை பாம்பு கடித்துள்ளது.
வாவா சுரேஷ் குறித்த பாம்பை பிடித்து பைக்குள் போடும் போது ஏற்பட்ட, திடீர் அசம்பாவிதத்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வாவா சுரேஷ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினத்தில் சுயநினைவிற்கு வந்த வாவா சுரேஷ் மருத்துவர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.
தற்போது தன்னிச்சையாக சுவாசிக்கும் வாவா சுரேஷின் பதில்களை வைத்து, மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் எந்தவொரு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ள நிலையில், அவரிடம் பாம்பு கடித்தது குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. காரணம் இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் வாவா சுரேஷ் மருத்துவமனையில் இருந்து, தனது வலது கையினை உயர்த்தி பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
