நொடிப்பொழுதில் தப்பித்த கிரிக்கெட் வீரர்... பாம்பை பிடித்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்
பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என சொல்வார்கள். உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகளும் முதன்மையாக உள்ளன. இவை எண்ணிக்கையில் சற்று அதிகமாகவே இருக்கிறது.
காட்டுப் பகுதிகள், மனித நடமாட்டம் குறைவான இடங்களில் இவை அதிகம் தென்பட்டாலும், குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது நுழைவதும், மனிதர்கள் அதை கண்டு அஞ்சுவதையும் நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள்.
ஆஸ்திரேலிய அணியின் மூத்த கிரிகெட் வீரரான கிளென் மெகாராத் தான் இத்தகைய ஆபத்தான செயலை செய்தவர். அவரது மனைவி அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
அவர் அந்த வீடியோவில், அவரது வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றை, வெறும் வீடும் துடைக்க பயன்படும் மாப்பை வைத்து அப்புறப்படுத்துவதை காணலாம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான பாம்பை அவர் கையாண்ட விதம் நெட்டிசன்களை அச்சமடைய செய்தது.
குறிப்பாக, இரண்டு மூன்று முறை அந்த பாம்பை மாப் குச்சியை வைத்து தூக்க முயன்றபோது, அது சீற்றமடைந்து அவரை தாக்க முற்பட்டது பதைபதைப்பை ஏற்படுத்தியது.
அவரது மனைவியும் அவரை எச்சரிப்பதை வீடியோவில் கேட்க முடிகிறது. இருப்பினும், மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்ட மெக்ராத் பாம்பை லாவகமாக தூக்கி, வெளியே கொண்டு சென்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |