பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? சில தவறுகளை மட்டும் செய்திடவே கூடாதாம்
மழைக்காலத்தில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் மிக அதிகமாகவே இருக்கும். அதிலும் பாம்பு போன்று விஷம் அதிகம் கொண்ட விலங்கினால் மனிதர்களுக்கு ஆபத்துகள் அதிகம்.
இங்கு பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை காணலாம்.
பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் கடித்தால் அந்த இடத்தினை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும்.
அந்த இடத்தை அழுத்தி அல்லது கடித்து துப்பி விஷத்தை வெளியேற்றுவது போன்ற தவறான செயல்களை செய்யக்கூடாது.
கடிபட்ட இடத்திற்கு மேலும், கீழும் ஒரு துணியைக் கட்ட வேண்டும். துணியை அதிக இறுக்கமாகக் கட்டாமல் குறைந்தபட்சம் 1 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.
அதிக இறுக்கமாகக் கட்டினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும். துணியை கட்டியதும் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.
பாம்பு கடித்த தடத்தை வைத்து அது விஷமுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிவயது சிரமம் என்பதால் உடனே அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.
விஷப்பாம்பு தேள் கடித்த 1 மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்காவிட்டால், உயிரைக் காப்பாற்றுவது சிரமமாகிவிடும்.
பாம்பு கத்தத் தடம், ரத்தக்கசிவு மற்றும் ரத்த உறைவுக்கு ஆகும் நேரம் ஆகியவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்து அது எந்த பாம்பு என்று கண்டறிந்து சிகிச்சை கொடுக்கப்படும்.