படமெடுக்கும் பாம்புகளுடன் தூக்கம்! சரமாரியாக கொத்தும் பயங்கர காட்சி
சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் டஜன் கணக்கான கருப்பு நாகப்பாம்புகளுக்கு மத்தியில் படுத்திருப்பதை காண முடிகின்றது.
மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த நபரை பாம்பு கடிக்கவும் செய்கிறது. எனினும், அப்படியும் அவருக்கு எந்த வலியும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இணையவாசிகள் வீடியோவைப் பார்த்து அதிசயிக்கின்றனர், ஆச்சரியத்தில் உள்ளனர்.
டஜன் கணக்கான விஷ நாகப்பாம்புகள் ஒரு இடத்தில் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. அப்போது ஒரு நபர் அங்கு வந்து படுத்துக் கொள்கிறார். இந்த ஆபத்தான பாம்புகளுக்கு மத்தியில் ஒருவர் தூங்க முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அனைத்து கருப்பு நாகப்பாம்புகளும் அவரைப் பார்க்கின்றன. இதுமட்டுமின்றி, இதில் பல பாம்புகள் தொடர்ந்து நபரை கடிக்கவும் செய்கின்றன. ஆனால், அந்த நபர் இவற்றால் அசரவில்லை.