Viral Video: பறவையின் கூட்டை சுற்றிவளைத்த பாம்பு... பதற வைக்கும் வைரல் காட்சி
பாம்பு ஒன்று தூக்கனாங் குருவி கூட்டை ஆக்கிரமித்து பறவைகளை பரிதவிக்க வைத்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பாம்புகள் என்பது விஷத்தன்மை அதிகம் காணப்படுவதால் இதனை அவதானித்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்து விடுகின்றனர்.
ஏனெனில் இதன் விஷத்தன்மை மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடுகின்றது. ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று மரம் ஏறுவதையும் சமீபத்தில் நாம் அவதானித்திருந்தோம்.
இங்கு பாம்பு ஒன்று மிகவும் அசால்டாக மரம் ஏறி, பறவையின் கூட்டினை பந்தாடியுள்ளது. பொதுவாக பறவைகள் மரத்தில் கூடுகட்டி வாழ்வது மிகவும் பாதுகாப்பு என்று தான் நினைத்துக் கொள்ளும்.
ஆனால் பறவைகளின் வாழ்விடத்திற்கும் இந்த பாம்பானது இடையூறு செய்து வருகின்றது. பாம்பு தனது கூட்டை வளைத்துக் கொண்டதால் பறவைகள் அனைத்தும் செய்வதறியாது தவித்து கூச்சலிட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |