குண்டாகி அடையாளம் தெரியாமல் மாறிய SMS பட நடிகை அனுயா? வைரல் புகைப்படம்
ஜீவா, சந்தானம் நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனுயா. இளைஞர்களை அந்த படம் பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக அந்த படத்தின் காமெடி தற்போதும் பேசப்படும் ஒன்று.
நடிகை அனுயா
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் குறுகிய காலத்துக்குள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நஞ்சுபுரம், நகரம் மற்றும் நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இருப்பினும் அனுயா அதற்கு பிறகு முன்னணி ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
அதன் பிறகு தமிழில் வெளிவந்த பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசத்தெரியாத ஒரே காரணத்தால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார்.
பின் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது திரையுலக வாழ்க்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டோடு விலகினார்.
பின் எந்தவித திரையுலங்களிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை அனுயாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |