வங்கிப் பேரை வைத்து மோசடியில் இறங்கியிருக்கும் மர்ம கும்பல்: வங்கிகளில் இருந்து போன் வந்தால் கவனம்!
இப்போதெல்லாம் மோசடிகளும் மோசடிக்காரர்களும் அதிகரித்து விட்டனர். இதனால் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது வங்கியிலும் மோசடிக்காரர்கள் அதிகரித்துள்ளதால் வங்கியில் இருந்து மக்களுக்கு பொது அறிவித்தல்கள் விடப்பட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை
வங்கி வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் கணக்கை முடக்குவதாக கூறி சைபர் மோசடியாளர்கள் இலட்சக்கணக்கான பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.
மும்பையில் தனியார் வங்கி வாடிக்கையாளார்களுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பிய ஆன்-லைன் மோசடியார்கள், உங்களது KYC/ PAN தகவல்களை தெரிவிக்கவில்லை என்றால் கணக்க முடக்கிவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.
மோசடியாளர்கள் அனுப்பிய இணையதள லிங்கை உண்மையென நம்பிய வாடிக்கையாளர்கள், அதனை கிளிக் செய்து சுய விபரங்களை பதிவிட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தன்னை வங்கி மேலாளர் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு, OTP-யை பதிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்படியே செய்த வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்த பணம் எல்லாம் மாயமாகியிருக்கிறது. இவ்வாறு 40 வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் பொலிஸில் புகாரளித்துள்ளார்கள். அதுகுறித்து விசாரித்து வரும் மும்பை பொலிஸார், இதுபோன்ற மோசடி எஸ்.எம்.எஸ். லிங்கை கிளிக் செய்து ஏமாறாதீர்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.
அண்மையில் நடிகை நக்மாவிற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.