உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம்! எச்சரிக்கை பதிவு இதோ
புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று நன்கு அறிந்திருந்தும், பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது.
அதிர வைத்த சுகாதார அமைப்பு
புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார்.
வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என்கிறது உலக சுகாதார அமைப்பு.
உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் அறிக்கை.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்
புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது.
எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.
ஆயுளை அதிகரிக்க எந்தெந்த உணவு சாப்பிடலாம்?
புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
‘இரண்டாவது உயிர்க்கொல்லி’ எனப் பெயர் பெற்றுள்ள புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் புகையிலைப் பொருட்களால் உயிரிழந்துள்ளனர்.
புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல. புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகின்றனர்.