பாம்புகளை ஈர்க்கும் வாசனை - உங்களுக்கு தெரியாமலேயே வீட்டில் இருக்கிறதா?
பாம்புகளுக்கு சில வாசனைகள் பிடிக்கும் அது பாம்புகளை ஈர்க்கும் என கூறப்படுகின்றது.

மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டர்.., முதலில் வாங்கும் 2500 பேருக்கு மட்டும் குறைவான விலை
பாம்புகளை ஈர்க்கும் வாசனை
பொதுவாக மனிதர்கள் வாழும் இடத்தில் பாம்புகள் வருவது குறைவு தான். ஆனால் அதையும் மீறி வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் பாம்பு அடிக்கடி வந்தால் அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.
நமது வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள சில தவறான சூழ்நிலைகள், பாம்புகளை அடிக்கடி வீட்டை சுற்றி வரச் செய்யும்.
1.பாம்புகள் பொதுவாக எலிகளை உணவாக உட்கொள்ளும். இதனால் உங்கள் வீட்டில் எலி இருந்தால் அந்த வாசனை பாம்பை ஈர்க்கும். எனவே வீட்டில் எலிகள் இருந்தால் அந்த எலிகளின் வாசனை பாம்புகளை ஈர்க்கும்.
2.நீங்கள் வீட்டில் பறவைகளை வளர்ந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பறவைகளின் எச்சங்கள் முட்டைகள் என எதுவாயினும் அதன் வாசனை பாம்புகளை ஈர்க்கும். எனவே இந்த விடயங்களை கவனித்து நடந்துகொள்வது அவசியம்.
3.மீன்கள் மற்றும் நீரில் வாழும் சில உயிரினங்கள் பாம்புகளுக்கு ஆசையான உணவாகும். எனவே வீட்டிடை சுற்றி நீர் நிலைகள் இருந்தால் அவற்றின் அருகே புற் புதர் இல்லாமல் துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இல்லையெனில் இவற்றை சாப்பிட பாம்புகள் வரும்.
பாம்புகள் பெரோமோன்கள் மூலம் மற்ற பாம்புகளை ஈர்க்கின்றன. இதனால் ஒரு பாமபு ஒரு இடத்தில் இரண்டு தடவைக்கு மேல் வந்தால் அவை பெரோமோன்களை வெளியிடுகிறது. இது மற்றைய பாம்புகளை ஈர்க்கும்.
எனவே நீர் ஆதாரங்கள் போன்ற பாம்புகளை ஈர்க்கும் விஷயங்களை தவிர்ப்பது முக்கியம். இந்த வாசனைகளைக் குறைப்பதன் மூலம், பாம்புகள் வருவதையும் குறைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |