உங்க போனில் கூட இது இருக்கலாம்! அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே
உங்கள் கையடக்கத் தொலைபேசியில் வரும் நோட்டிபிகேஷன்களை பார்க்காமல் விட்டு விடுகிறீர்களா? உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன் அலர்ட் அம்சம் போதுமானதாக இல்லையா?
அப்போது உங்கள் அன்ட்ரொய்ட், மற்றும் ஐபோன் சாதனங்களில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள்.
இந்த செட்டிங்ஸில் வந்திருக்கும் புதிய மாற்றம் என்னவென்றால், உங்கள் தொலைபேசியில் இருக்கும் எல்இடி லைட்டை நோட்டிபிகேஷன் அலர்ட் கருவியாக பயன்படுத்தலாம்.
இந்த அம்சமானது காது கேளாதவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், சத்தமான தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
யாரேனும் உங்களைத் தொடர்பு கொள்ளும்போது போன் ஒலிப்பது உங்களுக்கு கேட்காவிட்டாலம் இந்த ப்ளாஷ் லைட் ஒளிர்வது உங்களது கவனத்தை ஈர்க்கும்.
சரி முதலில் ஐபோனில் ப்ளாஷ் லைட் நோட்டிவிகேஷன் எவ்வாறு செயற்படுத்தலாம்?
- முதலாவதாக உங்கள் தொலைபேசியில் செட்டிங்குக்கு செல்ல வேண்டும்.
- பின்னர் அசசபிலிட்டி செட்டிங்ஸ் (Accessibility) என்ற அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் ஓடியோ மற்றும் விஷூவல் (Audio/visual)என்பதை தெரிவு செய்யவும்.
- பின்னர் டர்ன் ஒன் எல்இடி ப்ளாஷ் ஃபார் அலர்ட் (Turn on LED flash alert)என்ற அம்சத்தை ஒன் செய்யவும்.
- இந்த அம்சமான உங்கள் தொலைபேசியில் இருந்தால் மாத்திரமே செயல்படும்.
அன்ட்ரொய்ட் தொலைபேசியில் இதை எவ்வாறு செயற்படுத்தலாம்?
- முதலில் செட்டிங்குக்குள் செல்லவும்.
- பின்னர் அசசபிலிட்டி செட்டிங்ஸ் (Accessibility settings) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்பு கீழே காணப்படும் அட்வான்ஸ் செட்டிங்ஸ் (Advanced settings) என்ற அம்சத்தை க்ளிக் செய்யவும்.
- அதற்கடுத்ததாக, ஃப்ளாஷ் நோட்டிபிகேஷன்(Flash notification) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- தற்போது அதிலேயுள்ள கெமரா ஃப்ளாஷ் நோட்டிபிகேஷனை (Camera flash notification)செயல்படுத்தவும்.
- இறுதியாக ஸ்க்ரீன் ஃப்ளாஷ் நோட்டிபிகேஷனை (Screen flash notification) செயல்படுத்தவும்.
சேவையில் இருக்கும் பொழுது நோட்டிபிகேஷன் திரையில் காட்டப்படும். அதனால் அப்போது, ப்ளாஷ் லைட் ஒளிராது.
இந்த அம்சத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.