ஸ்மார்ட்போன் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்கு உழைக்க நாம் செய்ய வேண்டிய சில செயல்முறைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று மக்களின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரணமாக இருக்கின்றது. அதாவது உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்ததாக ஸ்மார்ட்போன் இருக்கின்றது.
தற்போது புதிய வடிவமைப்புடன் பல புதிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருகின்றது. ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டு கால அளவில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஏனெனில் இதன் செயல்திறன் குறைந்துவிடுவதால் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது.
தற்போது ஸ்மார்ட் போன் நீண்ட நாட்கள் உழைப்பதற்கு செய்ய வேண்டிய சின்ன விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன் நீண்ட காலம் உழைக்கனுமா?
ஸ்மாரட்போனின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்யாமல் 20 லிருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டும். பேட்டரி ஜீரோவாகி அணையாமல் பார்த்துக் கொள்ளவும்.
போனுக்கு பொருத்தமான சார்ஜனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலிவான சார்ஜரை பயன்படுத்தி நீங்களே உங்களது போனுக்கு எதிரியாக வேண்டாம்.
பேட்டரி நீண்ட நேரம் உழைக்க திரை வெளிச்சத்தை குறைத்து வைக்கவும். அதாவது பேட்டரி சேவர் மோடை ஆன் செய்யவும்.
தேவையற்ற செயலிகளை அணைத்து வைக்கவும். அப்பொழுது தான் போன் அதிக சூடாகாமல் இருக்கும்.
சார்ஜ் செய்யும் போனின் உறையை எடுத்துவிட்டு சார்ஜ் போடவும். அவ்வப்போது அப்டேட் கொடுக்கவும்.
லொகேஷன், வைஃபை, புளூடூத் இவற்றினை தேவையற்ற நேரத்தில் அணைத்து வைக்க வேண்டும். அடிக்கடி ரீபூட் செய்து தேவையற்ற விடயத்தை அணைத்து வைக்கவும்.
போனின் திரை மற்றும் கேமராவை பாதுகாக்க பம்பர் கேஸ் போடவும். இவை நல்ல கிரிப் கிடைப்பதால், கீழே விழாமல் இருக்கும். ஸ்பிஜென் அல்லது கேஸோலஜி மாதிரி தரமான கேஸை பயன்படுத்தவும்.
IP64 ரேட்டிங் இருந்தா மழைக்கு பயப்பட தேவையில்லை. ஆனாலும் உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் தண்ணீர் ஆபத்தானதாகும்.
தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனடியாக போனை அணைத்து வைக்கவும், சிலிக்கா ஜெல் பாக்கெட்களை பயன்படுத்தவும்.
ஸ்மார்ட்போனின் திரை உடையாமல் இருப்பதற்கு டெம்பர்டு கிளாஸ் முக்கியமாகும். தரமான டெம்பர்டு கிளாஸ் பயன்படுத்தினால் ஸ்க்ரோலிங் நன்றாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
