இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! மெட்டாவின் புதிய அம்சம்
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ரீல்ஸ் காணொளிகளுக்கு தனி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
இன்றைய உலகம் இணையத்தில் மூழ்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
முக்கியமாக ஃபேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களுக்கு பயன்களை அள்ளிக் கொடுத்து வருகின்றது.
புதிய புதிய வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் குறித்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
புதிய செயலி
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளிகளுக்காக தனி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே போன்று சீனாவின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் அதைப் பயன்படுத்தி அமெரிக்க சந்தையில் இன்ஸ்டாகிராமுக்கு அதிகப் பயனாளர்களைக் கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
