ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை செய்யாதீங்க
மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் நீங்கள் இந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
இன்று மொபைல் போன் என்பது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறிவருகின்றது. ஆம் எந்தவொரு இடத்திற்கு செல்லும் போதும் கையில் இதனை எடுத்துக்கொண்டு தான் செல்கிறோம்.
இவ்வாறு மனிதர்களுடன் அவர்களின் உயிர் போன்று வலம்வரும் இந்த போன்கள் தண்ணீரில் விழுந்துவிட்டால், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
தண்ணீரில் ஸ்மார்ட் போன் விழுந்தால் என்ன செய்வது?
போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனே சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் மொபைலில் இருக்கும் சாதனங்கள் ஷார்ட் ஆகாமல் இருக்குமாம். பின்பு சிம் கார்டையும் எடுத்துவிட வேண்டும்.
மொபைலில் நீர் இல்லாத அளவிற்கு காட்டன் துணி கொண்டு நன்கு துடைக்க வேண்டும். ஹேர் டிரையரை பயன்படுத்திவிட வேண்டாம். இதனை பயன்படுத்தினால் உள்ளே இருக்கும் சிறு மின் இணைப்புகள் சேதமாகிவிடும்.
கீழே விழுந்தவுடன் மொபைல் சுவிட்ச் ஆப் ஆனால் உடனே சார்ஜ் இல்லையென்று நினைத்து சார்ஜ் போட்டுவிட வேண்டாம். இவை மொபைல் போனை முற்றிலும் பாதிப்படைந்து விடும்.
மொபைல் உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மெதுவாக ஷேக் செய்து நீரை வெளியேற்றலாம். ஆனால் பலரும் அரிசி மூட்டைகளில் வைத்து சரிசெய்வார்கள். ஆனால் இவ்வாறு வைத்தால் எந்தவொரு பயனும் இல்லை.
தண்ணீரில் விழுந்த போனை உடனே வெயிலில் காய வைக்காதீர்கள். அதே போன்று சூடான பொருட்கள் பக்கத்திலும் வைக்க வேண்டாம்.
தண்ணீரில் விழுந்து நீங்கள் முயற்சித்தும் சரியாகவில்லை என்றால், உடனே சர்வீஸ் கடைக்கு கொண்டு சென்று உண்மையை கூறிவிட வேண்டும். நீரில் போட்டால் வாரண்டி இருக்காது என்று நினைத்து உண்மையை கூறாமல் விட்டுவிடாதீர்கள். ஏனெனில் தற்போது வெளியாகும் அனைத்து போன்களிலும் நீர், அல்லது திரவம் எதுவும் உள்ளே சென்றால் உடனே கலர் மாறிவிடுமாம். இதனால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |