போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகுதா? அப்போ இதை பண்ணுங்க
தற்போது Smart phone இல்லாதவர்கள் என்று யாரையும் பார்க்க முடியாது. அந்தளவு Smart phone மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளது.
தொடர்ந்து Smart phone பயன்படுத்தும் ஒருவருக்கு தலைவலி, மன அழுத்தம், கண் பார்வையில் பிரச்சினை உள்ளிட்ட ஆரோக்கிய குறைபாடுகளும் வரும்.
ஆனால் Smart phone-களில் பேட்டரி ஆயுள் குறைந்து விட்டால் அதனை சரிச் செய்வது கடினம். வேறு ஒரு பேட்டரி மாற்ற வேண்டும் அல்லது புதிதாக Smart phone ஒன்று தான் வாங்க வேண்டும்.
அந்த வகையில், Smart phoneகளில் பேட்டரி ஆயுள் காலம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பேட்டரி சேமிப்பது எப்படி?
1. முதலில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் Brightness-ஐ குறைத்து பயன்படுத்த வேண்டும். Auto brightness ஆப்ஷனை ON செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஸ்கிரீன் டைன் அவுட் நேரத்தை 15 முதல் 30 வினாடிகளாக செட்டிங்கில் மாற்றி வைத்துக் கொள்ளவும். இப்படி செய்தால் உங்கள் பேட்டரி சார்ஜர் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
2. Background apps பல உள்ளன. அதனை பயன்படுத்தி Background of Repression விருப்பத்தை OFF செய்து வைத்துக் கொண்டால் பேட்டரி சார்ஜ் இறங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
3. GPS, Wi-Fi மற்றும் Bluetooth போன்ற இணைப்புக்களை OFF செய்து வைத்துக் கொள்ளவும். தேவையில்லாத நேரங்களில் Locatio-ஐ OFF செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் பேட்டரியை சேமிக்கும்.
4. Battery saver mode-ஐ ON செய்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் போனை பயன்படுத்தும் பொழுது விளைவுகளை இது குறைத்துக் கொள்ளும். உங்களுடைய போனையும் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
5.5G இணைப்பு கொண்ட போன்களில் அதிக பேட்டரி பயன்படுத்தப்படும்.
6. டார்க் மோட் பயன்படுத்துவது OLED அல்லது AMOLED திரைகளைக் கொண்ட தொலைபேசிகளில் பேட்டரி பயன்பாடு குறைக்கலாம். தேவையற்ற அறிவிப்புக்களை முடக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய மாற்றங்கள் கூட போனுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |