ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டுமா? மிகக் குறைவான விலையில் விபரம் இதோ
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்மார்ட் வாட்சுகள் பணக்காரர்கள் மட்டுமே வாங்க கூடிய விலையுயர்ந்த ஒரு பொருளாக இருந்தன. ஏனென்றால் மிக குறைவான பிராண்டுகள் குறிப்பாக பிரபல முன்னணி பிராண்டுகள் மட்டுமே ஸ்மார்ட் வாட்சுகளை விற்றன.
ஆப்பிள், ஃபிட்பிட், கார்மின் மற்றும் சாம்சங் உள்ளிட்ட சில பிராண்டுகள் மட்டுமே ஸ்மார்ட் வாட்ச்களை விற்க கூடிய நிறுவனங்களாக இருந்தன.
வழக்கம் போலவே இவற்றின் விலையில் ஏதும் பெரிய அளவில் சலுகைகள் இல்லை என்றாலும் நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்சை வாங்க விரும்பினால் அதற்காக ரூ.20,000 அல்லது ரூ.30,000 செலவழிக்க தேவையில்லை.
உங்கள் பட்ஜெட் ரூ.5,000-ஆக இருந்தாலும் கூட இந்த விலைக்குள் சிறந்த சில ஸ்மார்ட் வாட்ச்கள் மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகின்றன. 5,000 ரூபாய்க்கு கீழ் உள்ள ஸ்மார்ட் வாட்சுகளும் விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்சுகளை போலவே வாடிக்கையாளருக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வழங்குகின்றன.
மலிவான விலையில் ஸ்மார்ட் போன்களை விற்று வரும் ரியல்மி, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களும் ரூ.10,000-க்கு கீழ் நல்ல சிறப்பம்சம் வாய்ந்த ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
போட் எக்ஸ்டெண்ட் ஸ்மார்ட்வாட்ச் (Boat Xtend smartwatch):
மலிவான விலையில் (ரூ.2,999) நேர்த்தியான மற்றும் கவர்ச்சிகரமான ஸ்மார்ட் வாட்ச் வேண்டுமென்றால் இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதை பற்றி நீங்கள் யோசிக்கலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் அனைத்து அளவு மணிக்கட்டுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு நல்ல ஸ்கிரீன் சைஸுடன் வருகிறது. இதில் ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்ஸிஜன் மானிட்டர் மற்றும் பல சுகாதார அம்சங்களை உள்ளடக்கியது. இதன் பேட்டரி ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
