ஸ்மார்ட்போன் 100% சார்ஜ் ஆன பிறகு என்ன நடக்கும்? தெரிந்துகொள்வோம்...!
இன்றைய தலைமுறையினர்கள் ஸ்மார்ட் போனிலேயே நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர். இதனால் பல உடல் ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
மேலும், ஸ்மார்ட்போன் பேட்டரிகள் நீண்ட நேரத்திற்கு நிற்கவில்லை, சீக்கிரமாகவே சார்ஜ் தீர்ந்து விடுகிறது என இன்றைய தலைமுறையினர் அதிகம் புலம்கின்றனர்.
ஆனால், அதையெல்லாம் போக்க நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரிகள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் என பலவற்றையும் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும், நீண்ட நேரம் பயன்படுத்துவதால், சார்ஜ் சீக்கிரமாக இறங்கிவிடுகிறது.
அதிலும், இரவு முழுவதும் செல்போனிற்கு சார்ஜ் போட்டு விட்டு உறங்க செல்கின்றனர். இப்படி இரவு முழுவதும் சார்ஜ் ஏறும் செல்போன்கள் வெடித்து விடும் என சிலர் அச்சம் கொள்வதுண்டு.
சில நேரங்களில் சார்ஜ் ஏறிக் கொண்டு இருக்கும் பொழுதே செல்போன் வெடிப்பதோ அல்லது சேதமடைந்து போவதற்கோ வாய்ப்புகள் உண்டு.
ஆனால், அவை மூன்றாம் தரப்பு சார்ஜரை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நிகழலாம். இதனிடையே, ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் போடும் பொழுது 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பிறகும் தொடர்ந்து சார்ஜர் இணைப்பில் இருந்தால் வெடித்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அதிகபட்சமாக 3 முதல் 4 மணி நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் 100% சார்ஜ் ஏறி விடுகின்றன. இரவில் 6 முதல் 7 மணி நேரம் சார்ஜ் தொடர்ந்து இணைப்பில் இருப்பது ஆபத்தில்லை என்கிறார்கள்.
நாம் உபயோகப்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களில் லித்தியம்-அயான்(li-io) பேட்டரி பயன்படுத்தப்படுகின்றன.
செயல்திறன் மிக்க லித்தியம் அயான் பேட்டரி வகையில் 98% அளவிற்கு சார்ஜ் ஏறிய பிறகு மின்னோட்டத்தின் வேகம் குறையத் துவங்கும். அதன் பின்னர் 100%-ஐ முழுமையாக அடைந்த பிறகு மின்னோட்டமானது முழுவதுமாக நிறுத்தப்படும்.
முன்பு பயன்படுத்தப்பட்ட லித்தியம் கார்பனேட் உள்ளிட்ட பேட்டரி வகைகளில் அதிக நேரம் சார்ஜ் ஏறினால் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்து இருக்கலாம்.
தற்பொழுது அதுபோன்று நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை... அதற்கென அதிக நேரம் சார்ஜ் போட்டுவைப்பத்தையும் தவிர்ப்பதும் நல்லது தான்....