பாம்பை விட 20 நிமிடங்களில் மனிதனை கொல்லும் விஷம் கொண்ட அக்டோபஸ் இனம்...வைரல் வீடியோ
மனிதனை 20 நிமிடங்களில் கொல்லக்கூடிய விஷதன்மை கொண்ட ஆக்டோபஸின் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
வைரல் வீடியோ
சிறிய கடல்வாழ் உயிரினம் 26 நபர்களை கொல்லக்கூடிய கொடிய விஷத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இது நீல வளையம் கொண்ட கொடிய விஷம் நிறைந்த ஆக்டோபஸ்.
ஒரு ஆரோக்கியமான மனிதனை இதனால் 20 நிமிடங்களில் கொல்ல முடியும். இந்த வீடியோவில் இருக்கும் சிறிய ஆக்டோபஸ் நீல நிற வளையத்தில் உமிழ்நீர் சுரப்பியில் உள்ள சிம்பியோடிக் பாக்டீரியா டெட்ரோடோடாக்ஸின் (TTX) என்ற நச்சை உற்பத்தி செய்கிறது.
இந்த டெட்ரோடோடாக்ஸின் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து நரம்பு தூண்டுதலை தடுக்கின்றன. இதனால் தசைகள் சுருங்குவது நின்று போய் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆக்டோபஸிடம் விஷக்கடி பட்ட நபர்கள் வாந்தி, மயக்கம் போன்றவற்றை அணுபவிக்கிறார்கள். நேரம் போக போக அந்த நபரால் அசைய கூட முடியாமல் போகும்.
இதன் பின்னர் சுவாசக்கோளாறை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கிறது. இவை அனைத்தும் தொற்று பாதித்த சில நிமிடங்களில் நடைபெறுகிறது.
Don't let its size fool you – the blue-ringed octopus carries enough venom to kill a human in as little as 20 minutes! Though it uses the toxin primarily for defence, it also comes in handy to take down small prey like crabs and shrimp ??
— Lewis Pugh Foundation (@LewisPughFDN) May 21, 2024
?: Jacob Guy pic.twitter.com/Dtidqe3xjr
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |