செல்போனில் இந்த சிறிய துளை எதற்குனு தெரியுமா? பலரும் அறிந்திடாத காரணம்
செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை எதற்கான என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செல்போன்
இன்று அனைவரது கையிலும் செல்போன் நடமாட்டம் இருந்து வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் போன்கள் தான் அதிகமானோர் பாவித்து வருகின்றனர்.
இது சில ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் மதிப்பிலாள செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதே போன்று விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றது.
செல்போன்களில் இருக்கும் சிறப்பம்சங்களை சில காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்ளும் நாம் அதன் வெளிப்பகுதி குறித்து அவ்வளவாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை கவனித்திருப்பீர்கள். இது எதற்கு என்று நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எதற்காக சிறிய ஓட்டை
செல்போனில் கீழே இருக்கும் மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். மிகவும் புரியும்படியாக கூற வேண்டுமெனில் நாம் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் தான் இதுவாகும்.
நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும்போது, இயக்கப்படும் இந்த மைக்ரோஃபோனானது, குறித்த சிறிய துளை நமது குரலை சரியாக பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.
அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும்.
அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர் தரப்புக்கு கேட்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |