ஆண்கள் தப்பி தவறியும் இந்த மீனை சாப்பிடாதீங்க.. ஆபத்து நிச்சயம்
தற்போதைய சூழ்நிலையில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகமாக வாழ்கிறார்கள்.
இவர்கள் ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவைகளை வித விதமாக சமைத்து சாப்பிடுகிறார். மாறாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கரப்பான் பூச்சி, பூரான் இப்படியான பூச்சிகளையும் சாப்பிடுகிறார்கள்.
இந்த உணவுகளில் மீன் மாத்திரமே இயற்கையாக கடலிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடியது. மற்றவைகள் அனைத்தும் பண்ணைகள், வீடுகள் என மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன.
இப்படியொரு நிலையில் தேளி மீன்கள் என அழைக்கப்படும் மீன் வகைகளை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு குணப்படுத்த முடியாத பல நோய்கள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வகை மீன்கள் சந்தையில் “கடல் கெளுத்தி” என விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களை வாங்கி சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட உடல் வியாதிகள் வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேளி மீன்கள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேளி மீன்கள்
தேளி மீன்கள் பார்ப்பதற்கு தேள் போன்று காணப்படும். அத்துடன் ஒரு அடிக்கு மேல் வளரும் விஷத்தன்மை கொண்ட மீன் வகையாக பார்க்கப்படுகிறது.
இந்த வகை மீன்கள், மொய் மீன்,பூ விரால், தேளி விரால், ஆப்பிரிக்கன் கெளுத்தி உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த மீன்களை இந்தியா உட்பட பல நாடுகள் தடைச் செய்துள்ளன. ஆனால் இன்னும் சில இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள்.
மேலும் கேளி மீனை வளர்பவர்கள் அதற்கு உணவாக கோழிக்கழிவுகள், செத்த நாய்கள் இப்படி மனிதர்களுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட கொடுக்கின்றனர். இதனால் குறுகிய காலத்தில் கொளுத்து அதிக எடை கொண்ட மீன்களாக காட்சியளிக்கும்.
இப்படியான மீன்களை கொள்வனவு செய்து பெயரை மாற்றி சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.
இதனை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், புற்றுநோய், தோல் நோய், ஆண்மை குறைபாடு போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |