கிரிக்கெட் வீரர் ஜடேஜாவையே மிஞ்சிய குட்டி யானை! செய்த குறும்புத்தனத்தை பாருங்க
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
இங்கு குட்டியானை ஒன்று கிரிக்கெட் வீரர் ஜடேஜாவையே ஓவர்டேக் செய்துவிடும் செயல் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைக் கூட்டத்தின் நடுவே, குட்டி யானை ஒன்று உள்ளது. பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைகளை சுற்றி கொக்குகள் அமர்ந்திருக்கின்றன.
அந்த கொக்குகளை பார்த்தும் குஷியான குட்டி யானை, தும்பிக்கையில் வாள் வீசுவதுபோல் வீசு விளையாடுகிறது. சேட்டையாக இருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த பிறகு ரவீந்திர ஜடேஜா பேட்டை வாள்வீசுவது போல் சுழற்றியதுடன் ஒப்பிட்டுள்ளார்.
2வது டெஸ்ட் சதமடித்த ஜடேஜா இப்படி தான் பேட்டை சுழற்றியதாக காமெடியாக கமெண்ட் அடித்துள்ளார். இந்த வீடியோ இதுவரை சுமார் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
Ravindra Jadeja after scoring his 2nd test Century ?#RAVINDRAJADEJA #INDvSL
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) March 5, 2022
pic.twitter.com/IS0ESNXa1a