ஈரத்தலையுடன் தூங்குவீங்களா? இனி அந்த தப்பை பண்ணாதீங்க.. ஆபத்து!
பொதுவாக பெண்கள் ஈரமான கூந்தலை பராமரிப்பது கடினம் என நினைத்து பாதியில் ஈர்த்தல் தூங்கி விடுவார்கள்.
அல்லது வெளியில் செல்வதற்காக குளித்திருப்பார்கள் அவசரத்தில் ஈரமான கூந்தலைக்கட்டி கொண்டு போய் விடுவார்கள்.
இது போன்ற சிறுசிறு தவறுகள் காலப்போக்கில் பெரிய பிரச்சினைகளில் கொண்டு சென்று விடும்.
அத்துடன் கூந்தல் உதிர்வு பிரச்சினைக்கு இதுவும் ஒரு மூலக்காரணமாக இருக்கின்றது.
அந்த வகையில் ஈரமான கூந்தலுடன் தூங்குவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பாதிப்புக்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க..
1. தூங்கி எழும்பும் போது தலைமுடி ஒன்றை ஒன்று உராய்ந்து அதிகமான சீக்கை உண்டு பண்ணும்.
2.ஒவ்வொரு முடியும் புரதங்கள் மற்றும் உயிரணுக்களால் ஆனது. இவ்வாறு தூங்கும் போது மடி வலிமையை இழந்து உதிர ஆரம்பிக்கின்றது.
3. தலையில் இருக்கும் மிருதுவான செதிலின் மேற்பரப்பில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஹைட்ரோபோபிக் அல்லது ஈரமாக இருக்கும் போது தண்ணீரை உறிஞ்ச வாய்ப்பு உள்ளது.
4.தலையணையுடன் கூந்தல் உராயும் பொழுது வலிமை இழந்த கூந்தல் உதிர ஆரம்பிக்கின்றது.
5. ஈரமான தலையுடன் தூங்கும் பொழுது உச்சந்தலையில் தொற்று ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |