கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மையா?
இரவில் தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணையை வைத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் முக்கியமான ஒன்றாகும். பகல் முழுவதும் ஒருவர் வேலை பார்த்துவிட்டு இரவில் ஓய்வு எடுப்பது என்றால் அது தூக்கத்தில் தான்.
தூங்கும் போது நமது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கின்றது. ஆனால் பல நேரங்களில் முதுகுவலி மற்றும் மன அழுத்தம், சோர்வு போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர்.
இவர்கள் இரண்டு கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்கினால் நல்ல பலனை அடையலாம் என்று கூறப்படுகின்றது.
கால்களுக்கு இடையே தலையணை
இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது பெண்களுக்கு முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்குமாம்.
மாதவிடாய் காலங்களில் வரும் வலி மற்றும் எரிச்சல் இதிலிருந்து விடுபட உதவி செய்கின்றது.
கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கினால் வயிற்று நரம்புகளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்குமாம்.
பெண்களுக்கு இடுப்பு வலி, சோர்வு இவற்றிலிருந்து உதவியாக இருக்கின்றது.
நல்ல தூக்கம் கிடைப்பதால் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.. மேலும் இரத்த ஓட்டம் சீராகவும், முதுகெலும்பு சீரமைப்பு மேம்படவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |