இரவு 10 மணிக்குள் தூங்கினால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தாமதமாக தூங்காதீங்க
இரவு 10 மணிக்குள் தூங்குவதற்கு ஏற்படும் நன்மையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரவு 10 மணிக்குள் தூங்குங்க...
இன்றைய காலத்தில் இரவில் மிகவும் தாமதமாக தூங்கும் பழக்கத்தினை இளைஞர்கள் வைத்துள்ளனர். முக்கியமான டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது என்று நேரத்தினை வீணடித்து வருகின்றனர்.
ஆனால் இரவு 10 மணிக்குள் தூங்கி எழுந்தால் நாம் என்னென்ன நன்மையினை பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
JGI/TOM GRILL / GETTY IMAGES
இரவில் சீக்கிரமாக தூங்க செல்வதால் இதய மற்றும் மன ஆரோக்கியம் கிடைப்பதுடன், தாமதமாக தூங்குவதால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் அவசியமென்பதால் இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6:00 மணிக்கு எழுந்தால் மறுநாள் சில உடற்பயிற்சிகளை செய்து அன்றைய தினத்திற்கு தயாராகலாம் என்று கூறப்படுகிறது.
இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் இரவு 10 மணிக்குள் தூங்கி விட வேண்டுமாம். அதுவே காலதாமதமாக தூங்கும் பழக்கத்தினைக் கொண்டால் பல்வேறு நோய்கள் உடம்பை பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இரவு தாமதமாக தூங்க சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு சீக்கிரம் தூங்குவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரவில் சீக்கிரமாக தூங்குவதால் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |