இந்த வீடியோவை பார்த்தால் தூங்கும் முன் நிச்சயம் யோசிப்பீர்கள்? வைரலாகும் வீடியோவில் எச்சரிக்கை தகவல்
ஒருவர் தன் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியே ஆகவேண்டுமாம். அப்படி மாற்றவில்லையானால் என்ன ஆகும் என்பதை மருத்துவர் ஒருவர் விளக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பிரித்தானிய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்னும் மருத்துவர், ஒரு மனிதன் ஆண்டொன்றிற்கு 4 கிலோ இறந்த தோல் செல்களை இழப்பதாக தெரிவிக்கிறார்.
அப்படி தோலிலிருந்து உதிர்ந்து விழும் செல்கள் உங்கள் தலையணையில் சேரும்போது, அவை dust mites என்னும் நுண் பூச்சிகளுக்கு விருந்தளிப்பதுபோல் ஆகிவிடுமாம். அந்த பூச்சிகளில் ஒரு பூச்சி மட்டுமே, நாளொன்றிற்கு 20 முறை கழிவுகளை வெளியேற்றுமாம்.
நூற்றுக்கணக்கான பூச்சிகள் நம் தலையணையில் வாழும் பட்சத்தில், நம் தலையணை அந்த பூச்சிகளின் கழிப்பறையாகவே மாறிவிடும்.
அந்த தலையணையில் முகம் வைத்து தூங்கும்போது, இந்த கழிவுகளை நாம் சுவாசிப்பதால், சுவாசக்கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் கரண். அத்துடன், தலையணையில் வியர்வை, நம் தலையில் தேய்த்த எண்ணெய் ஆகியவையும் சேர்ந்தால், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளும் வளர வாய்ப்புள்ளது.
சரி, உங்கள் தலையணை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து போனதா என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்குத் தெரியுமா? ஒரு தலையணையை இரண்டாக மடித்தால், மீண்டும் அது தன் பழைய நிலைமைக்கு தானாக திரும்பவில்லையென்றால், அது இறந்துபோய்விட்டது என்று பொருள் என்கிறார் கரண்.
அந்த தலையணையை பயன்படுத்தினால் உங்களுக்கு நன்மை ஏற்படுவதை விட தீமைதான் அதிகம் ஏற்படும் என்கிறார் அவர்.
மருத்துவர் கரணின் வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர், வைரலாகியுள்ள அவரது வீடியோவுக்கு கமெண்ட்கள் குவிகின்றனவாம்.