இரவு உணவை தவிர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்குமா?
இரவு உணவை சாப்பிடாமல் தவிரப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? இந்த செயல்பாடு ஆரோக்கியமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காலை உணவை தவிர்ப்பதுடன், டயட் என்ற பெயரில் இரவு உணவையும் தவிர்த்து வருகின்றனர்.

இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று இவ்வாறு செய்துவரும் நிலையில், சுகாதார நிபுணர்கள் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தினை தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் தூங்குவது நல்லதா?
வெறும் வயிற்றில் தூங்குவது உடல் மற்றும் மனதை பாதிப்பதுடன், சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம். உடல் தனது சக்திக்கு சேர்த்து வைத்த கொழுப்பினை பயன்படுத்துவதால் சிறிது உடல் எடை குறைந்தாலும், மெட்டபாலிசம் சமநிலையில் இல்லாமல் போகுமாம்.
இரவு உணவை தவிர்த்தால் வாயு பிரச்சனை, அசிடிட்டி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை அதிகரிப்பதுடன், காலையில் அசௌகரியம், தலைவலி மற்றும் சோர்வு ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் இரவு உணவினை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இன்னும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
சரியாக தூக்கம் வராமல் நள்ளிரவில் அசௌகரியத்தினை உணர்வதுடன், இரவு தூக்கமும் தடைபடும். வெறும் வயிற்றில் சில நேரங்களில் தூங்கினால் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

இதையே தொடர்ந்து செய்து வந்தால் சில பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். ஆதலால் இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு எளிதில் ஜீரணமாகும் உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |