இனி காலை உணவை மறந்தும் தவிர்க்காதீங்க.. ஆபத்து
நாள் முழுவதும் நம் உடம்புக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதற்கு காலை உணவானது பெரும் பங்களிக்கிறது.
காலை உணவை தவிர்ப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்ட இருப்பதாக ஆய்வு முடிவுகள் பலவற்றில் தெரியவந்துள்ளது.
காலை உணவை சாப்பிட்டுவிட்டால் அது அடுத்த வேலை வரை அவ்வப்போது ஏற்படும் ஹர்ங்கர் பேங்ஸ் எனப்படும் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கத்தை குறைக்க உதவும்.
காலை உணவானது உங்கள் மூளைக்கு ஊக்கமளிக்கும், குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தும்.
அந்த வகையில் காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தவிர்ப்பதன் விளைவுகள்
1. மூளைக்கு தேவைப்படுகிற குளுக்கோஸை சீரான காலை உணவானது வழங்குகிறது. காலை உணவை தவிர்ப்பது செறிவு, நினைவாற்றல் போன்ற செயல்திறன்களைக் அதுமட்டுமின்றி வேலை திறனையும் பாதிக்கக்கூடும்.
2. காலை உணவை தவிர்ப்பவர்கள் மதியத்தில் அதிகமாகச் சாப்பிட வேண்டி தேவை இருக்கும் எனவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
3. காலை உணவை தவிர்ப்பதனால் குறிப்பாக உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
4. காலை உணவை தவிர்த்தால் உடலில் இன்சுலின் அளவானதை குறைத்தது மட்டுமல்லாது மதிய உணவிற்கு பின் இன்சுலின் அளவு இரட்டிப்பாக அதிகரிக்கக்கூடும்.
5. காலை உணவை தவிர்த்துவிட்டு நினைத்த நேரங்களில் கண்டபடி உணவு உண்டு வருவதனால் கொழுப்பு அதிகரிக்கும், இரத்த அழுத்தம் கூடும், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படக்கூடும்.
6. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உட்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் காலை உணவை உட்கொள்வது.
7. காலை உணவை தவிர்ப்பதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது அதனால் மனநிலை மாற்றங்கள், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
8. காலை உணவைத் தவிர்ப்பது கேன்சர் ஆபத்துகளையும் அதிகரிக்கக்கூடும்.
காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை
- முழு தானியங்கள்
- பட்டைதீட்டப்படாத பருப்புகள்
- குறைந்த கொழுப்பு கொண்ட பால்
- காய்கறிகள்
- பழங்கள்
- முட்டை