இந்த இடங்களில் கொழுப்பு படிந்தால் மாரடைப்பு வரும் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சிலர் ஒல்லியாக இருந்தாலும் அவர்களுக்கு மாரடைப்பு வரும் என கூறப்படுகின்றது. இது கெட்ட கொழுப்பு சேரும் இடைத்தை பொறுத்து உள்ளது.

மாரடைப்பு
மாரடைப்பு (Heart Attack) என்பது இதயத் தசையின் ஒரு பகுதிக்குத் தேவையான இரத்த ஓட்டம், தமனிகளில் ஏற்படும் கொழுப்புப் படிவுகளால் (Plaque) தடைபடும்போது, தசை சேதமடைந்து அல்லது உயிரிழந்து ஏற்படும் ஒரு உயிருக்கு ஆபத்தான நிலை.
இது பெரும்பாலும் அதிக எடை உள்ளவர்களுக்க தான் வரும் என்பது நமக்கு தெரியும். ஆனால் இது மிக ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இந்த நோய் வரும்.
அதாவது அவர்களின் உடலின் உள் பகுதியில் கொழுப்பு படியும் போது மாரடைப்பு வரும். ஆனால் பார்ப்பதற்கு அவர்கள் மிகவும் ஒல்லியாக தான் இருப்பார்கள்.

தொப்பை கொழுப்பு
வயிற்றுப் பகுதியைச் சுற்றிச் சேரும் கொழுப்பு, பொதுவாக தொப்பைக் கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
இயல்பான உடல் எடையுடன் தோற்றமளிக்கும் நபர்களிடம்கூட இது நிகழ்கிறது. உண்மையில், எல்லா வகையான கொழுப்புகளும் உடலில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை.

இடுப்பு மற்றும் தொடைகளைச் சுற்றிச் சேரும் கொழுப்பு ஒப்பீட்டளவில் குறைவான தீங்கை விளைவிப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் வயிற்றுக் குழி, கல்லீரல், கணையம் மற்றும் குடல்களைச் சுற்றிச் சேரும் கொழுப்பு அதிக ஆபத்தை கொடுக்கும்.
இது மாரடைப்பிற்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் எடை மட்டுமல்ல, உடல் கொழுப்பு பரவியுள்ள விதமே மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிகப்படியான கொழுப்பு, குறிப்பாக வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பு, மாரடைப்பு மற்றும் இதய தமனி நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

அறிகுறிகள்
மார்பு அசௌகரியம்: நெஞ்சின் நடுவிலோ அல்லது இடது பக்கத்திலோ அழுத்தம், பிடிப்பு, வலி போன்றவை இருந்தால் அதிக கவனம் தேவை. இது மாரடைப்பு அறிகுறியாக இருக்கலாம்.
உடல் மேல் பகுதியில் வலி: கை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றுப் பகுதிகளில் வலி இருந்தால் அவதானம் தேவை.
மூச்சுத் திணறல்: மார்பு வலியுடன் அல்லது அதற்கு முன்பாக ஏற்படும் கடுமையான மூச்சுத் திணறல் வந்தால் கவனம் தேவை. குளிர் வியர்வை, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி அல்லது அஜீரணம் போன்ற உணர்வு.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |