இயற்கையாக முகம் பொலிவு பெற இதை மட்டும் செய்தால் போதும்...
நம்மில் பல பெண்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்க பல விஷயங்களை செய்வோம். பல அழகுசாதனப்பொருட்களை பாவிப்பது வழக்கம்.
இந்த அழகு சாதனப்பொருட்கள் முகத்தின் வெளித்தோற்றம் அழகாக இருப்பதற்கு மட்டும் தான் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் சருமம் இயற்கையாகவே அழகாகவும் பொலிவாகவும் வசீகரமாகவும் இருக்க இந்த எளிய வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
அழகு என்பது பார்ப்பதற்கு மட்டமல்ல அது நமது ஆரோக்கியத்திலும் பங்கெடுக்கிறது.
ஆரோக்கிய வழிகள்
1. முகம் எப்பவும் பளபளப்பாக இருப்பதற்கு நீங்கள் சரியான உறக்கத்தை பெற வேண்டும். தினசரி இரவு 9 முதல் 10 மணிக்குள் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்துக் கொள்வது அவசியம்.
இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள் மன அழுத்தம் என்பது இருக்காது. இதனால் நீங்கள் மிகவும் பிரகாசமாக தெரிவீர்கள். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் சருமம் ஆரோக்கியமாக மாறும்.
2. டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் உடனே அதை கைவிடுங்கள் இது உங்கள் அழகை மறைத்து சருமத்தை பெலிவிழக்கச்செய்யும்.
இதற்கு பதிலாக நீங்கள் பச்சை தேயிலையை எடுத்து கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டிடாக்ஸாக வேலை செய்கிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
3.உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நிலையில் இருந்து நீரேற்றத்துடன் அழகாக காட்சி அளிக்கும்.
இதனால் உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். தண்ணீர் இல்லையென்றால் இளநீரும் குடிக்கலாம்.
4.சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய வறுத்த உணவுகளை உட்கொள்ள கூடாது. சரிவிகித உணவுகளை உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
உங்கள் தினசரி வழக்கத்தில் பச்சை மற்றும் பருவகால காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து, சீரான உணவைப் பின்பற்றுங்கள்.
5.தினமம் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வர வேண்டும். யோகா செய்வது அழகாக இருப்பதில் ஒரு முக்கிய பங்கு செய்கிறது. தினமும் தியானம் செய்வதால் மன அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இது முகத்தில் முன்கூட்டிய நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
எனவே தியானம் யோகா செய்தால் நீங்கள் வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.