இனி தங்கப் பொடியை உடலில் தேய்த்து குளிக்கலாம்
தற்கால இளைய சமுதாயம் முக அழகை மேம்படுத்திக்கொள்ள பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றன.
நிறைய பொருட்களை உபயோகித்தாலும் முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என்பன வந்த வண்ணமே உள்ளன. ஆனால், நமது முன்னோர்கள் இவ்வாறு எந்தவிதமான செயற்கைப் பொருட்களையும் முகத்துக்கோ, உடலுக்கோ உபயோகப்படுத்தியதில்லை.
இயற்கையான பொருட்களை உபயோகப்படுத்தியே அழகை மேம்படுத்திக் கொண்டார்கள். சரி இனி நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய தங்க குளியல் பொடி எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
கஸ்தூரி மஞ்சள் - 1/2 கப்
ரோஜா பூ - 1 கப்
பயறு - 1/2 கப்
ஆவாரம் பூ - 1 கப்
பூலான் கிழங்கு பொடி - 2 தேக்கரண்டி
செய்முறை
ரோஜா பூ, பயறு, ஆவாரம் பூ என்பவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின்னர் பூலான் கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து அரைக்கவும். தங்க குளியல் பொடி தயாராகிவிட்டது.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
இந்தப் பொடியை பால்,ரோஸ் வோட்டர், தயிர் இதில் எதனுடன் வேண்டுமானாலும் கலக்கிக் கொண்டு உடல் முழுவதும் பூசி, அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
இந்த பொடியை மூன்று மாதங்கள் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.