முகம் கண்ணாடி மாதிரி ஜொலிக்க சீரம் வேண்டாம்-இதை வெறும் வயிற்றில் நீரில் கலந்து குடிங்க
எந்த வித கொலாஜன் சப்ளிமெண்ட்களும் இல்லாமல் சீரமும் இல்லாமல் நமது முகத்தை இரு மடங்கு கண்ணாடி போல் ஜொலிக்கச்செய்ய இந்த பொருளை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.
முகத்தின் பளபளப்பிற்கு
பளபளப்பான, மென்மையான, இளமையான சருமம் என்பது அனைவருடைய ஆசை. இந்த ஆசையைப் பூர்த்தி செய்ய பலர் விலையுயர்ந்த கிரீம்கள், சப்ளிமெண்ட்கள் என பலவற்றை முயற்சிக்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் பலன்கள் கிடைக்காமல், பணமும் வீணாகிறது. இப்படியான நேரத்தில், எளிமையான ஒரு இயற்கை வழியையும் வீட்டிலிருந்தே பின்பற்ற முடியும்.
செலவில்லாமல்,விளைவுகளில்லாமல், முகம் கண்ணாடிபோல் மின்ன இந்த நம்பகமான வீட்டுவைத்தியம் பெரிதும் உதவி செய்யும். சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இயற்கை பொலிவுடனும் மாற்றும் ஒரு எளிய தேசி செய்முறை தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
இந்த செய்முறையை பின்பற்றுவதன் மூலம் எந்தவிதமான ரசாயனங்கள் அல்லது பக்கவிளைவுகளும் இல்லாமல், முகத்தில் பிரகாசத்தை பெற்றுத் தர முடிகிறது.
பணச் செலவில்லாமல், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த இயற்கை வழி, உங்கள் தோலை பாதுகாக்கும் ஒரு சிறந்த தேர்வாக அமையும். அதை எப்படி செய்வது என்பதை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த எளிய பழக்கத்தை, குறைந்தது 2 மாதங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
அப்போதுதான் உங்கள் சருமத்தில் உண்மையான மாற்றங்களை காணலாம். இந்த இயற்கை முறையின் நன்மைகள்
- சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது
- வறட்சியைக் குறைக்கிறது
- சரும நெகிழ்ச்சியை (elasticity) மேம்படுத்துகிறது
- ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெய், சருமத்தை உட்புறத்திலிருந்தே பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |