சிறுநீரக பிரச்சனைக்கு மருந்தாகும் பப்பாளி காய்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு யூரிக் ஆசிட் என்பது பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டது.
யூரிக் ஆசிட் இரத்தத்தில் அதிகமானால் கீல்வாதம், சிறுநீரக கற்கள் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் யூரிக் ஆசிட் அளவைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு உணவு பழக்கங்களில் தேவை.
அதே போன்று நம்முடைய வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படியாயின், சிறுநீரக பிரச்சினைகளுக்கு பப்பாளி பழம் அல்லாமல் காய் மருந்தாக சாப்பிடுகிறார்கள்.
இது போன்று பப்பாளி காய் வேறு என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி காய் சாப்பிட்டால் என்ன பலன்?
1. பழுத்த மற்றும் காய் பப்பாளியில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இவை உடலிலுள்ள யூரிக் அமில அளவை குறைக்கிறது.
2. பப்பாளி காயில் பெப்பைன், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி இன்ஃபிளமேட்டரி ஆகிய பண்புகள் இருப்பதால் யூரிக் ஆசிட் உற்பத்தி கட்டுபாட்டில் இருக்கும். அதே சமயம், அதிகப்படியான யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலியும் சரியாகிறது.
3. பப்பாளிக் காயில் நமது உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளன. அத்துடன் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைடீடாக்ஸ் செய்து யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
4. பப்பாளி காயில் உள்ள டையூரிக் பண்புகள் யூரிக் அமிலத்தை ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து, சிறுநீர் பெருக்கியாக செயல்படும். இதனால் அதிகப்படியான சிறுநீர் வெளியேறும். சிறுநீர் வழியாக யூரிக் அமிலமும் வெளியேறி விடுகிறது.
பப்பாளி எப்படி சாப்பிடலாம்?
- பப்பாளியின் தோலை சீவி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி சாலட் போன்று தயார் செய்து சாப்பிடலாம். மற்ற பழங்களும் சேர்த்து சாப்பிடலாம்.
- முட்டைக்கோஸ், பீட்ரூட் காய்கறிகள் போன்று பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது சுவை நன்றாக இருக்கும்.
- சுரைக்காய் கூட்டு போன்ற காய்கறிகள் கூட்டு செய்யும் பொழுது விருப்பம் இருந்தால் பப்பாளி காய் சேர்க்கலாம். ஆனால் அதிகமாக வேக வைப்பதை தவிர்க்கவும்.
- பப்பாளி காய், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் மற்றும் துருவல் புலி ஆகியவற்றை சேர்த்து சட்னியாக அரைத்து காலையில் தோசைக்கு கொடுக்கலாம்.
- இன்ஸ்டன்ட் ஊறுகாய் போன்று செய்து மதியம் சாப்பாட்டுக்கு கொடுக்கலாம். கஞ்சிகளுடன் சேர்த்து பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |