கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது.
இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும்.
இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய்
1.முகத்தில் வரும் முகப்பருக்களை கருஞ்சீரக எண்ணெய் போக்குகிறது. இது ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அழற்சிக்கு எதிரான பண்புகள் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனை 60 நாட்கள் முகத்தில் தடவி வந்தால் முகப்ருக்களை தழும்பு இல்லாமல் குணப்படுத்தும்.
2.சொரியாசிஸ் என்ற சரும நோய்க்கு இந்த எண்ணெய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. இதற்கு காரணம் அதில் உள்ள தைமோகுயினன் என்ற உட்பொருளாகும். உடலில் வீக்கம் ஏற்பட்டால் அந்த வீக்கத்தை இது எளிதில் குணப்படுத்தும்.
இது திசுக்களின் வளர்ச்சியை தூண்டி, காயங்களை எளிதில் குணப்படுத்துகிறது. மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், வெட்டுகாயங்கள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
3.தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்தால் இந்த எண்ணெய் பயன்படுத்தும் போது முடியின் வேர்க்காம்புகளை இது வலுவாக மாற்றும்.
எனவே தலைக்கு தடவும் மாஸ்குகள் மற்றும் ஷாம்பூக்களில் கருஞ்சீரக எண்ணெய் கொண்டு பயன்படுத்த வேண்டும். இவை தவிர இந்த எண்ணெயால் பல நன்மைகள் கிடைக்கின்றன.