முகத்தை ப்ளீச் செய்யணுமா? இந்தப் பொருட்களே போதுமானது
மற்றவர்களை விட தான் அழகாக இருக்கவேண்டும் என்பதுதான் அனைவரதும் ஆசையாக இருக்கும். அதற்பாக பலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம்.
அந்தவகையில் வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவிழந்து போவது என்னவோ உண்மைதான். இந்த கருமையை நீக்கும் செயன்முறையே ப்ளீச்சிங்.
இயற்கையான முறையில் இந்த கருமையை எவ்வாறு நீக்கலாம் எனப் பார்ப்போம்.
image - health shots
ஒரேஞ்ச் தோல்
தேவையான பொருட்கள்
ஒரேஞ்ச் தோல் பொடி - 2 தேக்கரண்டி
வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி
வால்நட் பொடி - 1 தேக்கரண்டி
சந்தனத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரேஞ்ச் தோல் பொடி, சந்தனத்தூள், வெள்ளரிச்சாறு, வால்நட் பொடி என்பவற்றை நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் வெள்ளரிச்சாறு கொண்டு முகத்தை துடைத்து, ஒரேஞ்ச் தோல் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
பலன்
ஒரேஞ்ச் தோலில் உள்ள விட்டமின் சி சருமத்திலுள்ள சீரற்ற நிறத்தை நீக்குவதோடு கரும்புள்ளியையும் போக்க உதவும். மேலும் சருமத்துக்கு மினுமினுப்பைத் தரும்.
கடலை மா
தேவையான பொருட்கள்
கடலை மா - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
கோதுமை மா - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
பாதாம் - 5
செய்முறை
கோதுமை மா, கடலை மா, பொடி செய்த பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு என்பவற்றை கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவேண்டும்.
பின்னர் ஒரு பஞ்சை எடுத்து, காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஊறவைத்த கடலை மா கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
பலன்
பொதுவாகவே இயற்கை அழகு முறையில் கடலை மா முக்கிய இடத்தை வகிக்கின்றது. முகத்தை பொலிவாக்கவும் சரும நிறத்தை அதிகரிக்கவும் இது மிகவும் பயனுள்ளது.
புளி
தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சை அளவு
அரிசி மா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
ரோஜா பன்னீர் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் சூடான நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
அந்த சாற்றில் மஞ்சள் தூள், அரிசி மா, தேன், எலுமிச்சம் பழச்சாறு என்பவற்றை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்ததன் பின்னர் புளி கலவையை முகம் முழுவதும் பூச வேண்டும்.
பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
பலன்
புளி சருமத்துக்கு உடனடி பொலிவைத் தரக்கூடியது.