6ஆம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்? வசீகரமானவராமே
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
6,15,24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் 6 இன் கீழ் வருவார்கள்.
6ஆம் எண்ணின் கீழ் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களது எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? என்பவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவான குணங்கள்
கலைகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள். புகழ் விரும்பிகளாகவும் இருப்பர். 6 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அழகையும் ஆடம்பரத்தையும் விரும்புவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த பொழுதுபோக்காளர்களாக இருப்பர். நல்ல மனம் படைத்தவர்கள் ஆனால் ஓரளவே.
அதிர்ஷ்ட நிறம்
நீலம், அடர் நீலம், அடர் சிவப்பு, அடர் பச்சை போன்ற நிறங்கள் அதிர்ஷ்டமானவையாக இருக்கும். இந்த நிறங்களை அதிகமாக அணியலாம். மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு போன்றவை அதிர்ஷ்டமானவை அல்ல. எனவே தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்
அவர்களின் பிறந்த திகதிகளாக 6,15,24 என்பவை அதிர்ஷ்டமாக இருக்கும். அந்த நாட்களில் அவர்களால் சிறந்த முறையில் செயல்பட முடியும். அதன் பின்னர் 9,18,27 ஆகிய திகதிகள் அதிர்ஷ்டமாக இருக்கும். அதேசமயம் 3 ஆம் எண்ணின் கீழ்வரும் 3,12,21 ஆகிய எண்களும் 5,14,23 போன்ற எண்களும் துரதிர்ஷ்டமான எண்களாகும்.
தொழில்
வணிகர்களாக இருக்கலாம். நகைகள், பட்டுப் பொருட்கள், ஆடை வடிவமைப்புக்கள் என்பவற்றை விற்பனை செய்யலாம். கலை தொடர்பான தொழில்களில் ஈடுபடலாம்.
திருமணம்
பொதுவாகவே அன்பானவர்களாகவும் வசீகரமுடையவர்களாகவும் இருப்பர். இவர்களின் திருமண உறவும் பலனளிப்பதாக இருக்கும். 1,4,5,9 எண்களில் பிறந்தவர்களுடனான திருமணம் மகிழ்ச்சியாக அமையும். 2,7,8 ஆகிய எண்களின் கீழ் உள்ளவர்களுடனான திருமண உறவு மோசமானதாக இருக்கும்.