இலங்கை திருவாசக அரண்மனை: சிவராத்திரி நாளில் சிவனின் அற்புதம்
இன்று சிவராத்திரி தினம் என்பதால் இலங்கையில் உள்ள திருவாசக அரண்மனைக்கு பக்தர்கள் தீப தரிசனம் கண்டு வரும் நிலையில், இதுகுறித்த காணொளி ஒன்றினை இங்கு காணலாம்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்தோங்கும் மண்ணாக விளங்குகிறது. இந்த யாழ்ப்பாண நகரத்திற்குள் நம்மை வரவேற்கும் பகுதியாக நாவற்குழி என்ற இடம் இருக்கிறது.
நீர் ஏரிகளும், பனைமரக்காடுகளுமாக காட்சி தரும் இந்த இடத்தில், சிவபூமி என்ற பெயரிலான‘திருவாசக அரண்மனை’ ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
[ZKSVM
அரண்மனை போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இதில் திருக்கோவிலும் அமைந்துள்ளது. 21 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன தேர் ஒன்று உள்ளது.
இந்த தேரின் மீது லிங்க வடிவில் சிவபெருமானும், அவருக்கு அருகில் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். தேரின் முன்பாக கருங்கல்லால் ஆன நந்தி சிலையும் காணப்படுகின்றது.
மேலும் இந்த ஆலய அரண்மனையின் இரு மருங்கிலும், 108 சிவலிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரசித்துப் பெற்ற திருவாசக அரண்மனையின் ஆச்சரியமளிக்கும் பல உண்மைகளை கீழே காணொளியில் தெரிந்து கொள்வோம்.