Fridgeல் சிவலிங்கம்: படையெடுக்கும் மக்கள் கூட்டம்
ஆக்ராவில் உள்ள வீட்டொன்றில் இயற்கையாக தோன்றிய பனிக்கட்டி அமைப்பு சிவலிங்கம் போன்று இருப்பதாக கருதி அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.
அமர்நாத் யாத்திரை நடைபெற்றும் வரும் வேளையில் இந்த சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது.
குளிர்சாதன பெட்டியில் சிவலிங்கம்
ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது விசித்திரமான பனிக்கட்டி அமைப்பை பார்த்துள்ளனர்.
அதனை கவனித்த போது சிவலிங்கம் போன்ற உருவ அமைப்புடன் ஒத்துப்போவதாக கருதியுள்ளனர்.
இத்தகவல் அக்கம்பக்கத்தில் பரவியதும், மக்கள் அதனை காண குவியத்தொடங்கினர்.
ஜலாபிஷேக வழிபாடு
சிலர் ஜலாபிஷேகம் செய்து வழிபாடு செய்யத் தொடங்கினர், ஹர் ஹர் மகாதேவ் என முழக்கமிட்டனர், மக்கள் கூடியதால் அந்த வீடு வழிபாட்டு தலமாகவே மாறிவிட்டது.
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாக, தானாக உருவான பனிக்கட்டியை மக்கள் இவ்வாறு சித்தரிப்பது முட்டாள்தனமானது என கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அறிவியலை தாண்டி மக்கள் இதனை மதநம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கின்றனர்.
