சிறுவயதில் மனைவியுடன் ஊர்சுற்றிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சிறுவயதில் ஒன்றாக எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பயணத்தை சின்னத்திரையில் தொகுப்பாளராகவே தொடர்ந்தார். பின்பு கொமடியனாகவும் தனது கலை பயணத்தை தொடர்ந்த இவர், தனக்கு வந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார்.
இவர் 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் மாவீரன் என இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், அவரது மனைவி இருவரும் சிறுவயதில் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் மற்றும் கருத்துக்களை குவித்து வருகின்றது.