பழைய படங்களில் இருந்து தலைப்பை சுடும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் டைட்டில் பழைய படங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
இவர் தனது படங்களுக்கு பழைய படங்களின் தலைப்புகளை தேர்வு செய்து வைத்து வருகிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
அந்தவகையில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படத்திற்கு எதிர்நீச்சல் என டைட்டில் வைத்தனர்.
மீண்டும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படத்துக்கு காக்கி சட்டை என்று டைட்டில் வைத்தனர். போலீசாக கமல்ஹாசன் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் காக்கிசட்டை.
அடுத்து இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் வேலைக்காரன். இது எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1987-ல் வெளியான படத்தின் பெயரும் வேலைக்காரன்.
கடந்த ஆண்டு மடோன்அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் நடிகர் ரஜினிகாந்தின் படத்தின் டைட்டில் தான்.
அதுபோல் இவர் நடித்த ஹீரோ, பிரின்ஸ், டான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட தலைப்புகளிலும் ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இயக்குநர் கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான அமரன் படத்தின் டைட்டிலையே தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 21 படத்திற்கும் சிவகார்த்திகேயன் தேர்வு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |