சிவகார்த்திகேயனால் சொத்தை விற்க வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்... நடந்தது என்ன?
சொந்தமாக படம் எடுப்பதாக ஆரம்பித்த சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கடன் சுமையினை அடைப்பதாக கூறிய தயாரிப்பாளர் ஒருவர் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் ரெமோ மற்றும் வேலைக்காரன் போன்ற படங்களால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், தீராமல் இருந்த கடன் சுமையினை, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் என்பவர், தானாக தேடி வந்து அடைத்துவிடுவதாக கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து சில பட வாய்ப்புகளை தருவதாகவும், சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனும் தொடர்ந்து கே ஜே ஆர் ராஜேஷுடன் இணைந்து படம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர்களது கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை.
சிவகார்த்திகேயனை நம்பி சூர்யா, விக்ரம் ரேஞ்சுக்கு பட்ஜெட் போட்டு எடுத்து ஓடாத படம் தான் ஹீரோ.
இந்த படத்தால் மேலும் கடனாளி ஆகிவிட்ட தயாரிப்பாளர், சிவகார்த்திகேயனுடன் கடைசியில் எடுத்த சில படங்கள் தோல்விகளை சந்தித்ததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் 70 கோடி வரை பிசினஸ் வைத்திருந்த சிவகார்த்திகேயனின் தமிழ் வியாபாரம் தற்போது 50 கோடிக்கும் கீழ் வந்துவிட்டதாம்.
இதனால் சிவகார்த்திகேயனை வைத்து மிகப்பெரிய பிளான் போட்ட தயாரிப்பாளருக்கு செம்ம அடி விழுந்துள்ளது என்றும் சொத்துக்களை விற்க வேண்டிய நிலையில் தயாரிப்பாளர் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.